சங்க இலக்கிய மின் அகராதி

ஒரு மொழிக்கு மிகவும் இன்றியமையாததும் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிவதும் அகராதிகளாகும். இன்று கணினி வழியாக மின் அகராதியை தமிழ் ஆர்வலர்கள், நூலக உரிமையாளர்கள், பேராசியர்கள் உருவாக்கி வருகிறார்கள். மின் உலகில் தமிழ் மொழி சார்ந்த மின் அகராதிகள் எழுபத்தைந்துக்கு மேல் உள்ளன. ஆனால் சங்க இலக்கியங்களுக்கு என ஒரு தனி மின் அகராதி உருவாக்க படவில்லை.

பேராசிரியர் கா.உமாராஜ் அவர்கள் சங்க இலக்கியங்களுக்கான மின் அகராதியை உருவாக்கியுள்ளர். இவ்வாகராதி ஆய்வாளர்களுக்கும், மொழி அறிஞர்களுக்கும், மாணவர்களும் மிகவும் பயனுடையதாக அமையும்.

இவ்வாகராதில் சங்க இலக்கியத்திலுள்ள ஒரு சொல்லைக் கொடுத்தால் நாம் கேட்கும் சொல்லுக்கு கன நேரத்தில் அச்சொல்லுக்கான பொருள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடரடைவுடன் கொடுக்கும்.

இவ்வாகராதியில் சுமார் 4000 சங்க இலக்கியச் சொற்கள் உள்ளன. சங்க இலக்கிய மின் அகராதி


அகராதி-பொருளுடன் செம்மொழிக்கான மின் புத்தகங்கள்


மின் புத்தகங்கள் என்பது புத்தகங்களை தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி தட்டச்சு செய்து அதை ஒரு கோப்பாக சேமித்து மென்பொருளைப் பயன்படுத்தி இணையத்தில் ஒரு குறிப்பிட்ட இணைய முகவரியில் பதிவேற்றம் செய்வதாகும். இம்மின் நூல்களை கையடக்க வடிவில் சுருக்கிவிட முடியும். எளிதில் எங்கும் பயன்படுத்தலாம். மேலும் அதிக அளவில் வண்ணப் புகைப்படங்களையும் இன்மின்நூலில் இணைக்கலாம்.


இதுவரை மின்நூல்கள் அகராதிகளுடன் இணைக்கபடவில்லை. அவ்வாறு மின் நூல்கள் அகராதிகளுடன் இணைக்கும்போது நாம் சொல்லுக்கான விளக்கத்தை தனியாக தேட வேண்டியதில்லை.


பேராசிரியர் கா.உமாராஜ் மின் செம்மொழிக்கான மின் நூல்களுடன் அகராதியுடன் இணைத்து மின் நூலிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளை படிக்கும்போது தெரிந்துக் கொள்வதற்க்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

செம்மொழிக்கான மின் புத்தகங்கள் அகராதி